Poco M7 5G ரூ,9999 யில் அறிமுகம் இதிலிருக்கும் டாப் சுவாரஸ்ய அம்சம் என்ன

Updated on 03-Mar-2025

Poco M7 5G கடைசியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த போன் ரூ,10,000கீழ் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் Snapdragon ப்ரோசெசருடன் டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது, இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Poco M7 விலை மற்றும் விற்பனை

Poco M7 5G விலை 6GB + 128GB மாடலுக்கு ரூ.9,999 யில் தொடங்குகிறது மற்றும் 8GB + 128GB மாடலுக்கு ரூ.10,999 ஆகும். இந்த சாதனம் மார்ச் 7 ஆம் தேதி விற்பனைக்கு வரும், மேலும் இது Satin Black, Mint Green மற்றும் Ocean Blue வண்ணங்களில் கிடைக்கும். மார்ச் 7 ஆம் தேதிக்குப் பிறகு, இந்த போன் ரூ.10,499 மற்றும் ரூ.11,499க்கு கிடைக்கும்.

Poco M7 5G டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே : POCO M7 5G ஆனது 6.88-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 240Hz டச் ஸ்க்ரீன் ரேட்டை சப்போர்ட் செய்கிறது. இதில் 1,640 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரேசளுசன் கொண்டுள்ளது, மேலும் 600 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் TUV ரைன்லேண்ட் சர்டிபிகேசனுடன் வருகிறது.

ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்:- இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் உள்ளது, இது அட்ரினோ GPU ஆல் சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இதன் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக அதிகரிக்கலாம் . இந்த போன் 8ஜிபி வரை வெர்சுவல் ரேமையும் சப்போர்ட் செய்கிறது .

ஒப்பரேட்டிங் சிஸ்டம் : POCO M7 5G ஆனது Android 14-அடிப்படையிலான HyperOS யில் இயங்குகிறது. நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி கனேக்சனையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

கேமரா: இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX852 ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் உள்ளது. அதே நேரத்தில், வீடியோ காலிங் மற்றும் செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி: இது 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இருப்பினும், நிறுவனம் பாக்ஸில் 33W சார்ஜரை வழங்குகிறது.

கனெக்டிவிட்டி : 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட். உடன் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், IP52 ரேட்டிங் மற்றும் 150% சவுண்ட் அளவு அதிகரிப்பு ஆகியவை உள்ளன. டைமென்சன் மற்றும் எடை: இந்த போனின் சைஸ் 171.88 x 77.80 x 8.22 mm மற்றும் அதன் எடை 205.39 கிராம் ஆகும் .

இதையும் படிங்க Nothing யின் புதிய போன் இந்த தேதியில் அறிமுகமாகும், ஆனா அதற்குள் பல விஷயம் அம்பலமாகியது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :