Poco F7 5G
Poco இந்தியாவில் அதன் Poco F7 5G கடந்த மாதம் அறிமுகம் செய்தது மேலும் இன்று இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் இது இரண்டாவது விற்பனையாகும், மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் அது எப்படி ஆபர் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Poco F7 5G யின் இரண்டாவது விற்பனை இன்று அதாவது ஜூலை 5, 2025 அன்று மதியம் 12 மணிக்கு Flipkart யில் தொடங்குகிறது. Poco F7 5G இன் 12GB / 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.31,999 , இதை டிஸ்கவுண்ட்க்கு பிறகு ரூ.29,999க்கு வாங்கலாம். அதே நேரத்தில், 12GB / 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.33,999. சலுகையில், IDFC பேங்க் , SBI மற்றும் ICICI பேங்க் கார்ட்கள் மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 தள்ளுபடி பெறலாம். அல்லது எக்ஸ்சேஞ் ரூ.2,000 நன்மையைப் பெறலாம். இது தவிர, 12 மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI யின் நன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனம் 1 வருட கூடுதல் வாராண்டி வழங்குகிறது. அதே நேரத்தில், ரூ.1,000க்கு 1 வருடத்திற்கு இலவச ஸ்க்ரீன் ரீப்லேஷ்மென்ட் வாராண்டி கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 1,280×2,772 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 3,200 nits ஹை ப்ரைட்னாஸ் உள்ளது. அதன் டிஸ்ப்ளேவிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
இதையும் படிங்க OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,8,250 டிஸ்கவுண்ட் எங்கு தெரியுமா
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Xiaomi HyperOS 2.0 இல் இயங்குகிறது. நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களையும் 4 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இதன் இரட்டை பின்புற கேமரா அலகு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரிகேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இது முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 90 W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் இதில் 7,550mAh பேட்டரி உள்ளது. F7 5G இன் பேட்டரி குறைந்த பயன்பாட்டுடன் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று POCO கூறுகிறது.