Poco யின் புதிய போன் அறிமுகம் தகவல் வெளியானது எப்போ என்ற முழு தகவலையும் பாருங்க

Updated on 17-Jun-2025
HIGHLIGHTS

POCO இந்தியாவில் அதன் POCO F7 போனை அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது

Poco F7 இந்தியாவில் ஜூன் 24 at 5.30 PM IST மணிக்கு அறிமுகமாகும்

இந்த அறிமுக தகவலை அதிகாரபூர்வ Youtube மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart யில் பார்க்கலாம்

POCO இந்தியாவில் அதன் POCO F7 போனை அறிமுகம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. அதாவது இந்த போனை ஜூன் 24 இந்தியாவில் சந்தையில் அறிமுகம் செய்வதாக புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் மல அம்சங்களை வெளிட்டு தகவல் மற்றும் தேதி போன்ற தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

POCO F7 அறிமுக தேதி.

Poco F7 இந்தியாவில் ஜூன் 24 at 5.30 PM IST மணிக்கு அறிமுகமாகும் மேலும் இந்த அறிமுக தகவலை அதிகாரபூர்வ Youtube மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart யில் பார்க்கலாம் மேலும் இந்த புதிய டீசரில் இந்த பிராண்ட் உண்மையான சக்தியுடன் சாதனத்தை டீஸ் செய்துள்ளது. படத்தில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் போனைக் காட்டுகிறார்.

Poco F7 சிறப்பம்சம்.

Poco F7 போனின் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்களை பார்த்தல் இதில் 6.83-இன்ச் பிளாட் OLED LTPS டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த போனில் Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் கொண்டிருக்கும் இது கடந்த வெர்சன் Poco F6 யின் Snapdragon 8s Gen 3 விட அப்க்ரேட் ப்ரோசெசராக இருக்கும். மேலும் இதில் பயங்கரமான 7,550mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் இதில் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க 6400mAh பேட்டரி கொண்ட iQOO யின் இந்த போனில் வேற லெவல் டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்க செம்ம வாய்ப்பு

மேலும் Poco F7 கேமரா பற்றி பேசினால், இதில் டுயல் கேமரா செட்டப் உடன் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் சென்சார் கொண்டிருக்கும், இருப்பினும் இன்னும் பல சிறப்பம்சம் உறுதிப்படுத்தவில்லை .

Poco F7 விலை என்ன இருக்கும்.

நினைவுகூர, Poco F6 இந்திய சந்தையில் ரூ.29,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் இதேபோன்ற விலைக் குறியீட்டைப் பெற முடியும் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறினார் . நிறுவனம் இன்னும் விலை வரம்பை வெளியிடவில்லை. இந்த சாதனம் Flipkart, e-store மற்றும் பிற சில்லறை விற்பனை சேனல்களில் கிடைக்கும். சமீபத்திய அப்டேட்களுக்கு காத்திருங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :