Poco F2 Pro ஸ்மார்ட்போன் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது

Updated on 06-May-2020

போக்கோ பிராண்டின் புதிய போக்கோ F2 ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய டீசர்கள் போக்கோ பிராண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. 

போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போன் உருவாகி வருவதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே தளத்தில் பட்டியலிடப்பட்டது.

https://twitter.com/POCOGlobal/status/1256523829347676160?ref_src=twsrc%5Etfw

அந்த வகையில் போக்கோ F2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரெட்மி கே30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் இந்தியா தவிர்த்து சில சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

https://twitter.com/POCOGlobal/status/1257248603652919296?ref_src=twsrc%5Etfw

புதிய போக்கோ ஸ்மார்ட்போன் எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி புதிய போக்கோ F2 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி கே30 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், போக்கோ இந்தியா பொது பேலாளர், போக்கோ F2 ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :