புதிய Poco F2 புதிய டீசர் அறிமுக தேதி வெளியீடு தகவல்.

Updated on 07-May-2020
HIGHLIGHTS

போக்கோ பிராண்டு சார்பில் மே 12 ஆம் தேதி விர்ச்சுவல் நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

புதிய போக்கோ எஃப்2 பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், போக்கோ எஃப்2 ப்ரோ பற்றிய விவரங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், போக்கோ பிராண்டு சார்பில் மே 12 ஆம் தேதி விர்ச்சுவல் நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

போக்கோ பிராண்டு 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போனிற்கு மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் 

இது பெரும்பாலும் போக்கோ எஃப்2 மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது.மேலும் இந்த நிகழ்வுக்கான டீசர் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் போக்கோ பிராண்டு தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இதனால் ஆன்லைன் நிகழ்வில் போக்கோ பிராண்டு எந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

https://twitter.com/POCOGlobal/status/1257973380285857793?ref_src=twsrc%5Etfw

இதே விவரங்களை போக்கோ பிராண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அதிலும் போக்கோ பிராண்டின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :