Oppo இன்று இந்தியாவில் அதன் Oppo Reno சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்த சீரிஸ் யின் கீழ் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் Oppo Reno மற்றும் Oppo Reno 10x Zoom ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்தது.ஆனால் இப்பொழுது இந்திய விலை மற்றும் விற்பனையின் தகவல் வெளியாகியுள்ளது
OPPO RENO 10X ZOOM EDITION சிறப்பம்சங்கள்
Oppo Reno 10X zoom edition யில் 6.6 இன்ச் யின் AMOLED டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் HDR 10+ கண்டெட் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 93.1 ஸ்க்ரீன் பாடி ரேஷியோ வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சாதனத்தின் முன் புறத்தில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் ஓசன் க்ரீன் மற்றும் ஜெட் ப்ளாக் நிற விருப்பத்தில் வாங்கலாம் இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 855 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது 6GB/128GBமற்றும் 8GB/256GB வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் கேமரா பகுதியை பற்றி பேசினால்,இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 48 மெகாபிக்ஸல் யின் முக்கிய சென்சார் ஆக இருக்கிறது.இதனுடன் இதில் சோனியின் IMX586 சென்சார் இருக்கிறது. மற்றும் இதன் அப்ரட்ஜர் f/1.7 இருக்கிறது மற்றும் இதில் இரண்டாவதாக 8 மெகாபிக்ஸல் வைட் என்கில் சென்சார் இருக்கிறது மற்றும் இதன் மூன்றாவதாக 13 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதன் கேமராவை நிறுவனம் 10X ஹைபிரிட் ஜூம் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்றும் இதில் OIS அல்ட்ரா நைட் மோட் 2.0 போன்ற அம்சங்களை கொண்டுவந்துள்ளது, இதனுடன் இதன் முன் புறத்தில் 16MP ஷார்க் பின் ரைசிங் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது புதிய லுக் வழங்குகிறது.
பேட்டரி பற்றி பேசினால் இந்த சாதனத்தில் 4065mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இது VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் 2.0 போன்றவை இதில் அடங்கியுள்ளது. அது கேம் ஆப் மற்றும் சிஸ்டம் பூஸ்ட் செய்கிறது.மேலும் இந்த சாதனம் கலர் OS 6.0 யில் வேலை செய்கிறது.
OPPO RENO சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ ஸ்டான்டர்டு எடிஷனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படுகிறது. இதன் 10x லாஸ்-லெஸ் சூம் வெர்ஷன் 6.6 இன்ச் ஃபுல் HDR பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 32,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி பேசினால், 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல்யின் செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 48MP யின் கேமராவில் Sony IMX586 சென்சார் யின் VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஹைபர் 2.0 பூஸ்ட் அடங்கியுள்ளது இதனுடன் இது கேம்,ஆப் மற்றும் சிஸ்டம் பூஸ்ட் ஆகியவை இருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனிலும் கலர் OS அடிப்படையின் கீழ் வேலை செய்கிறது.
OPPO RENO மற்றும் OPPO RENO 10X ZOOM விலை
Oppo Reno 10x Zoom யின் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 39,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.அதுவே 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை 49,990 ரூபாயின் விலையில் வாங்கலாம் மற்றும் இதனுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 7 முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்ய முடியும் Oppo Reno வின் விலை 32,990ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது