Oppo யின் இந்த லேட்டஸ்ட் போனில் அதிரடியாக ரூ,3000 டிஸ்கவுண்ட்

Updated on 21-Aug-2025

Oppo யின் அதன் லேட்டஸ்ட் மிட் ரேன்ஜ் Oppo Reno 14 5G போன் அறிமுகம் செய்தது, நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் நீங்கள் இந்த போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

Oppo Reno 14 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Oppo Reno 14 5G யின் 8GB/256GB ஸ்டோரேஜ் வகை Flipkart யில் ரூ.37,999க்கு லிஸ்டசெய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு அதன் விலை ரூ.34,999 ஆகும். அதே நேரத்தில், பழைய போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கொடுப்பதன் மூலம் ரூ.31,500 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் முழு நன்மையும் ஈடாக வழங்கப்படும் போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது.

இதையும் படிங்க:Realme P4 சீரிஸ் 7000Mah பவர்புல் பேட்டரியுடன் அறிமுகம் மேலும் இதன் வேறலேவல் அம்சம் விலை எல்லாமே பாருங்க

Oppo Reno 14 5G சிறப்பம்சங்கள்

Oppo Reno 14 5G ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் பிளாட் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1.5K ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 240Hz டச் வேரியன்ட் ரேட்டை கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்த போனில் MediaTek Dimensity 8350 ப்ரோசெசர் உள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டமில் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் Android 15 அடிப்படையாகக் கொண்ட ColorOS 15 யில் இயங்குகிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், ரெனோ 14 5G ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. Reno 14 5G ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :