Oppo Find X2 மற்றும் Find X2 Pro இந்தியாவில் ஜூன் 17 அறிமுகமாகும்.

Updated on 04-Jun-2020
HIGHLIGHTS

Find X போன்களுக்கான டீசரை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளது

Find X2 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இரு மாதங்களுக்கு பின் ஒப்போ தனது  Find X2 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அந்த வகையில் ஒப்போ நிறுவனம் தனது Find X2 மற்றும் Find X2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கென ஒப்போ பிரத்யேக டீசரை வெளியிட்டு இருக்கிறது.

முன்னதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பின் சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய வெளியீட்டுக்கு முன் ஒப்போ தனது ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை அமேசான் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படம், மற்றும் அதன் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :