Oppo இன்று ஒரே நேரத்தில் மூன்று போன்கள் அறிமுகம், 7,000 mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்

Updated on 15-Sep-2025
HIGHLIGHTS

Oppo இன்று அதன் மூன்று போனை ஒரே நேரத்தில் அதன் புதிய F31 series இந்தியாவில் அறிமுகம் செய்தது

தில் Oppo F31, F31 Pro மற்றும் F31 Pro+ ஆகிய மூன்று சீரிஸ் அறிமுகம் செய்தது

இதனுடன் 7,000 mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் பார்க்கலாம்

Oppo இன்று அதன் மூன்று போனை ஒரே நேரத்தில் அதன் புதிய F31 series இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதில் Oppo F31, F31 Pro மற்றும் F31 Pro+ ஆகிய மூன்று சீரிஸ் அறிமுகம் செய்தது. இந்த போனில் ஸ்மூத் பர்போமான்ஸ், ஒவ்வொன்றிலும் தனித்துவமான பர்போமான்ஸ் இதனுடன் 7,000 mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் போன்ற பல அம்சங்கள் பார்க்கலாம் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Oppo F31 சிறப்பம்சம்

Oppo F31 அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.5 இன்ச் கொண்ட AMOLED பேணல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறத.இதை தவிர இந்த போனில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசருடன் வேப்பர் கூலிங் சேம்பர் உடன் வருகிறது அதாவது இதன் மூலம் கேமிங் மற்றும் தொடர்ந்து கன்டென்ட் பார்க்கும்போது சூடாக இருக்காது இதனுடன் இந்த ப்போனில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

கேமராவை பற்றி பேசுகையில் இந்த போனில் 50MP OIS கேமராவுடன் 2MP செகண்டரி சென்சார் கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த போனில் 16MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இது நீருக்கடியில் போட்டோ எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபி மோட்களை வழங்குகிறது.

இதை தவிர இந்த போனில் கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் 7,000 mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது மேலும் இந்த போனில் ColorOS 15 மற்றும் 2 ஆண்டு OS மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது.

Oppo F31 Pro சிறப்பம்சம்.

Oppo F31 Pro யின் அம்சங்கள் பற்றி பேசினால் 6.5-இன்ச் AMOLED பேனலுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. ஹூட்டின் கீழ், இந்த போனில் MediaTek Dimensity 7300 எனர்ஜி சிப்செட்டுடன் வருகிறது மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தெர்மல் மேனேஜ்மென்ட் 5219 mm² SuperCool VC அமைப்பைப் வழங்குகிறது.

இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி சென்சார் உடன் வருகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இந்த போனில் 32MP செல்ஃபி உடன் வருகிறது. இது முன் மற்றும் பின்புற கேமராக்களில் 4K வீடியோ ரேககர்டுடன் வருகிறது.

இந்த போனில் 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 உடன் வருகிறது. இந்த போனில் 7,000 mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் உடன் வருகிறது.

இதையும் படிங்க BBD Sale: மெகா ஆஃபர் வெறும் ரூ.39,999க்கு iphone, எந்த மாடல் தெரியுமா?

Oppo F31 Pro+ சிறப்பம்சம்

Oppo F31 Pro+ ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.8-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இது Snapdragon 7 Gen 3 சிப்செட் மற்றும் SuperCool VC செட்டிங் பெறுகிறது. இந்த போனில் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 12GB LPDDR4X RAM உடன் வருகிறது.

போட்டோ எடுப்பதற்கு , இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி சென்சார் உடன் வருகிறது. இந்த சாதனம் 32MP செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது. இது அதே 7,000 mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.

Oppo F31 Pro+, F31 Pro மற்றும் F31 விலை தகவல்

Oppo F31 5G யின் விலை ரூ,22,999 ஆகும் அதுவே, Oppo F31 Pro 5G விலை ரூ,26,999 ஆகும் அதுவே அதன் டாப் எண்டு Oppo F31 Pro+ போனின் விலை ரூ,32,999க்கு வாங்கலாம் மேலும் இதை செப்டம்பர் 19 அன்று ப்ளிப்கார்ட், amazon மற்றும் oppo-இ-ஸ்டோரில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :