ஒப்போ நிறுவனத்தின்A9 2020 ஸ்மார்ட்போன் A 5 2020 ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு பிரைமரி கேமராக்களுடன் அறிமுகமான இரு ஸ்மார்ட்போன்களில் 5000 Mah பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
Oppo A9 2020 சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 2 எம்.பி. சென்சார்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா
– டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
இந்தியாவில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமான நிலையில் ஒப்போ ஏ9 2020 4ஜி.பி. வேரியண்ட் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ9 2020 (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை மாற்றப்படாமல் ரூ. 19,990 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. குறைக்கப்பட்ட புதிய விலை அமேசான் மற்றும் ஆஃப்லைன் வலைத்தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.