ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.) மாடல் விலை ரூ. 16,990 இல் இருந்து தற்சமயம் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது
இந்தியாவில் ஒப்போ A1K ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. ஒப்போA1K ஸ்மார்ட்போனுடன் ஒப்போ F11விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் தற்சமயம் ரூ. 7,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே இதன் விலையில் ரூ. 500 குறைக்கப்பட்டிருந்தது.
ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி.) மாடல் விலை ரூ. 16,990 இல் இருந்து தற்சமயம் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் எஃப்11 ப்ரோ மாடலுடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் ஒப்போ F11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் நான்கு பிரைமரி கேமரா மற்றும் 5000 Mah பேட்டரி கொண்டிருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.