Oppo A 15 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் ரூ. 10,990 விலையில் அறிமுகமானது.

Updated on 17-Oct-2020
HIGHLIGHTS

Oppo A15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

Oppo A 15 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய Oppo A 15 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

Oppo A 15  சிறப்பம்சங்கள்

– 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 5 எம்பி செல்பி கேமரா
– டூயல் சிம் 
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி
– 4230 எம்ஏஹெச் பேட்டரி

இத்துடன் 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒஎஸ் 7.2, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 3டி வளைந்த பாடி, பின்புறம் கைரேகை சென்சார், 4230Mah  பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

விலை மற்றும் விற்பனை

புதிய ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :