OnePlus 7ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறது ஸ்மார்ட்போன் நிறுவனமான வெப்சைட் OnePlus.in மற்றும் oneplus ஆஃப்லைன் ஸ்டோரில் கிடைக்கும்.OnePlus 7 சீரிஸ் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது OnePlus 7 Pro ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து OnePlus 7 ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
ONEPLUS 7 சிறப்பம்சம்
OnePlus 7 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு full-screen display டிசைன் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு OnePlus 6T போன்ற வாட்டர் ட்ராப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது.இதை தவிர இந்த மொபைல் போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 855 உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 6.2-inch Full HD+ 60Hz AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
OnePlus 7 இதில் கேமரா பற்றி பேசினால் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25" சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது OnePlus 7 மொபைல் போனில் உங்களுக்கு 3700mAh பவர் பேட்டரி உடன் இன் டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
OnePlus 7 விலை
ஒன்பிளஸ் 7 ரூ. 32,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 37,999 விலையில் (மிரர் கிரே & சிவப்பு நிறம்) கிடைக்கும். அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்க உள்ளது.