Amazon India மற்றும் OnePlus இன்று 5 வது வருடாந்திரத்தை கொண்டாடும் விதமாக, ஒன் ப்ளஸ் இன்று OnePlus 7 Pro மற்றும் OnePlus 7T ஸ்மார்ட்போனில் 10,000 வரை பிளாட் டிஸ்கவுண்ட் வழங்கி அறிவித்துள்ளது, இந்த சிறப்பு தள்ளுபடி 25 நவம்பர் லிருந்து டிசம்பர் 2 வரை நடைபெறும்.
ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 5000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 39,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஃபிளாக்ஷிப் வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 3000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் நெபுளா புளூ, அல்மாண்ட் மற்றும் மிரர் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7000 வரை தள்ளுபடி பெற முடியும்.இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஃபிளாக்ஷிப் வேரியண்ட் ரூ. 37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது அதிகபட்சம் ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட்டெட் சில்வர் மற்றும் கிளேசியர் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.