ஒன்பிளஸ் 6T யில் 6.41 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம்

Updated on 31-Oct-2018
HIGHLIGHTS

இந்த புதிய ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, சிறிய நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும்

பல வதந்தி மற்றும் லீக்களுக்கு பிறகு ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஒன்பிளஸ் 6T  ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் 6T  ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது . 

இந்த புதிய ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே, சிறிய நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6T மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது, இருப்பினும் IP சர்டிபிகேட் எதுவும் கொடுக்கவில்லை 

போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், F/1.7 அப்ரேச்சர், OIS, 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர், 16 எம்.பி. சோனி IMX371 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6T  சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
– 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3700 Mah  பேட்டரி

ஒன்பிளஸ் 6T  ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.41,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.45,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6T  ஸ்மார்ட்போன் அமேசான் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை நவம்பர் 1ம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் , அமேசான், ஒன்பிளஸ் விற்பனையகங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா விற்பனையகங்களில் நவம்பர் 3ம் தேதி முதல் நடைபெறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :