OnePlus 12 5G phone get massive price discount on Amazon limited deal
நீங்கள் மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட போன் வாங்க நினைத்தால் OnePlus 12 வாங்கலாம் இது மிக சிறந்த டிசைன் மற்றும் சிறந்த பர்போமான்ஸ் கொண்ட போனை அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த OnePlus ஃபிளாக்ஷிப் சாதனத்தில் ரூ.19,001 வரை சேமிக்கலாம்.
OnePlus 12 இந்தியாவில் ரூ.64,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இதிலிருக்கும் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.
OnePlus 12 தற்போது அமேசானில் ரூ.64,999 லிருந்து ரூ.51,998க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ICICI அல்லது HDFC பேங்க் கார்டை பயன்படுத்தி கூடுதலாக ரூ.6,000 பேங்க் தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் மொத்த விலை சுமார் ரூ.45,000 ஆகக் குறையும். வாங்குபவர்கள் ரூ.2,521 யில் தொடங்கும் EMI-யையும் தேர்வு செய்யலாம், நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் உள்ளன.
கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் சிறப்பு தள்ளுபடி பெறலாம் ஆனால் போனின் கண்டிசன் பொறுத்து ரூ.22,800 வரை சிறந்த மதிப்புக்கு மாற்றிக் கொள்ளலாம். கஸ்டமர்கள் OnePlus Care எக்சிடேண்டல் சேத பாதுகாப்பு, மொபைல் டேமேஜ் ப்ரோடேக்சன் மற்றும் நீட்டிக்கப்பட்ட மொபைல் வாரண்டி போன்ற கூடுதல் பொருட்களையும் வாங்கலாம் .
OnePlus 12, 120hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.82-இன்ச் 2K AMOLED பேனலை வழங்குகிறது. இது 4,500 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு பிரத்யேக வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது. இது 16GB வரை RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5,400 mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP பிரைமரி ஷூட்டர், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோபிக் லென்ஸ் மற்றும் 48MP சோனி IMX581 ஷூட்டரை வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 32MP செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது.
இதையும் படிங்க: Samsung யின் இந்த போனில் அதிரடியாக பேங்க் ஆபருடன் 6000ரூபாய் டிஸ்கவுண்ட்