35,999 இருக்கும் Nubia Red Magic 3S யின் விலை இந்தியாவில் அறிமுகமாகும்,

Updated on 17-Oct-2019

Nubia Red Magic 3S specifications, price, launch, availability, sales : கேமிங் பிரியர்களுக்காகவே ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது நுபியா என்ற ஸ்மார்ட்போன் நிறுவனம். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் ரெட் மேஜிக் 3 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது அந்நிறுவனம். அதன் அப்கிரேடட் வெர்ஷனாக தற்போது வெளியாக உள்ளது ரெட் மேஜிக் 3S ஸ்மார்ட்போன்.

இந்த சாதனத்தின் சேமிப்பக மாறுபாடு, காட்சி, செயலி மற்றும் பிற விவரக்குறிப்புகள் பிளிப்கார்ட்டில் உள்ள தொலைபேசியின் பிரத்யேக மைக்ரோசைட்டில் பகிரப்பட்டன, அவை இப்போது அகற்றப்பட்டுள்ளன. நுபியா ரெட் மேஜிக் 3 எஸ் ரூ .35,999 ஆரம்ப விலையில் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாட்டை 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்தலாம், , இதில் 8 ஜிபி ரேம் இருக்கும். நுபியா ரெட் மேஜிக் 3 எஸ் இன் இரண்டாவது சக்திவாய்ந்த மாறுபாட்டை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்த முடியும், அதன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

Red Magic 3S விலை 
இந்தியா வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் 2 வேரியண்ட்டுகளை கொண்டுள்ளது. 8GB RAM + 128GB-ன் விலை 2,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30000) ஆகும். 12GB RAM + 256GB-ன் விலை 3,799 யுவான் ஆகும். உலக அளவில் அனைத்து மார்க்கெட்டிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன் ஆரம்ப விலை 479 டாலர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nubia Red Magic 3S சிறப்பம்சம்.
6.65 இன்ச் ஃபுல் எச்டி + எச்.டி.ஆர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது. இதன் ரெசலியூசன் 1080×2340 பிக்சல்களாகும். குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855+ ப்ரோசசரை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ப்ரைட்நெஸ் 430 நிட்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகும்.

கேமராவை பொறுத்தமட்டில் 48 எம்.பி. சோனி சென்சாரை பெற்றுள்ளது. 15 ஃபிரேம்ஸ் பெர் செகண்ட் என்ற வீதத்தில் 8கே வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போனினால் ரெக்கார்ட் செய்ய இயலும். எக்ளிப்ஸ் ப்ளாக், மெச்சா சில்வர் மற்றும் சைபர் ஷேட் கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :