Nubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 855ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்.

Updated on 12-Oct-2019

இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு சீனாவில் கடந்த மாதம் ரெட் மேஜிக் 3எஸ் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது. இது ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 

இந்நிலையில், ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.
Nubia Red Magic 3S  சிறப்பம்சங்கள்:

– 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
– 675MHz அட்ரினோ 640 GPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
– 12 ஜி.பி. LPDDR4x ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ரெட்மேஜிக் ஒ.எஸ். 2.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5000 Mah . பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் UFS 3.0 ஸ்டோரஜ் கொண்டிருக்கிறது. இதிலும் ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். எக்ஸ், மற்றும் 3டி சவுண்ட் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5000 Mah  பேட்டபி மற்றும் 27 வாட் க்விக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :