Nothing Phone 3
Nothing இந்த மாதம் ஆரம்பத்தில் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Nothing Phone (3) அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ப்ரீ-ஆர்டர்க்கு இருக்கிறது. இப்போது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது, அதில் நீங்கள் நத்திங் போன் (3)-ஐ முன்கூட்டியே ஆர்டர் செய்தால், வெறும் 1 ரூபாய்க்கு நத்திங் இயர் 2024 (பிளாக்)-ஐப் பெறலாம். இந்த சலுகையைப் பற்றி முழுமையாக பார்க்கலாம் வாங்க.
Nothing Ear Black இயர்பட்ஸ் ரூ,14,999 அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் ஆபரின் கீழ் ரூ, 11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதுவே Nothing Phone 3 யின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,79,999 மற்றும் 16GB + 512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 89,999ரூபாயாக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளாக் மற்றும் வைட் கலர் ஆப்சனில் இருக்கிறது.
ஜூலை 1 இரவு 11:30 மணி முதல் ஜூலை 12 பிற்பகல் 3 மணி வரை நத்திங் போன் (3)-ஐ ப்ரீ ஆர்டர் யில் வாங்கினால் கஸ்டமர்கள் , நத்திங் போன் (3) டெலிவரி செய்யப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு நத்திங் நத்திங் இயர் 2024 (பிளாக்)-இல் தள்ளுபடி பெறுவார்கள். ஃபோன் (3) டெலிவரி செய்யப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு இயர் 2024 (பிளாக்)-யில் தள்ளுபடி தயாரிப்பு பக்கத்தில் தெரியும். தகுதியுள்ள கஸ்டமர்களுக்கு நத்திங் இயர் 2024 (பிளாக்) ரூ.1க்கு வாங்கலாம். பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க், ICICI பேங்க் மற்றும் IDFC பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் ரூ.5000 தள்ளுபடி பெறலாம்.
Nothing Phone (3) போனை நீங்கள் ப்ரீ ஆர்டர் செய்தால் ரூ, 11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கும் Nothing Ear Black இயர்பட்ஸ் வெறும் ரூ,1க்கு வாங்கலாம்.
நத்திங் போன் 3 இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அடிப்படை 12ஜிபி + 256ஜிபி உள்ளமைவின் விலை ரூ.79,999, அதே நேரத்தில் உயர்நிலை 16ஜிபி + 512ஜிபி வகையின் விலை ரூ.89,999. இது தற்போது இந்தியாவில் கிடைக்கும் பல ஃபிளாக்ஷிப்களைப் போலவே உள்ளது. நத்திங் போன் 3 வெள்ளை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,30,000 டிஸ்கவுண்ட் புதிய போன் வருகைக்காக பழைய போனில் சூப்பர் ஆபர்
நத்திங் போன் 3, 120hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் AMOLED பேனலுடன் வருகிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மற்றும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் வருகிறது.
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் உடன் வருகிறது, 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5,500 mAh பேட்டரியைப் வழங்குகிறது . இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் OS 3.5 யில் இயங்குகிறது. இது 5 வருட OS மற்றும் 7 வருட பாதுகாப்பு கனேக்சங்களை வழங்கும். இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேஷன் வழங்குகிறது .
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது, இந்த போனில் EIS உடன் 50MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.