அதிக பேட்டரி பேக்கப் கொண்ட Nokia 5310 ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும்.

Updated on 14-Jun-2020
HIGHLIGHTS

Nokia 5310 ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம்

Nokia 5310 பீச்சர் போனில் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் முன்புற ஸ்பீக்கர்கள்

நோக்கியா 5310 வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

HMD குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5310 பீச்சர் போன் மாடலின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. இந்தியாவில் நோக்கியா 5310 ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5310 பீச்சர் போனில் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் முன்புற ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 
நோக்கியா

நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

– 2.4 இன்ச் 320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே2ஜி
– எம்டி6260ஏ பிராசஸர்
– 8 எம்பி ரேம், 16 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– சிங்கிள் / டூயல் சிம்
– சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
– விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
– 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி

நோக்கியா 5310 வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 44 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :