HMD Global யின் மற்றும் ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் Nokia 2.3 என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனின் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இருப்பினும் இதை இந்திய சந்தையில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிறுவனம் இந்த மொபைல் போனில் ஒரு வருட ரீப்ளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் எக்ஸ்சேஞ்சுக்கு 6 மாத வாரன்டியும் வழங்கப்படுகிறது.
– 6.2 இன்ச் 720×1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
– குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். GE-class GPU
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9 பை
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது கேமரா
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
– எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி.
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதிய நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.