Nokia 225 மற்றும் Nokia 215 ஸ்மார்ட்போன் 4ஜி வசதியுடன் அறிமுகம்.

Updated on 21-Oct-2020
HIGHLIGHTS

இந்தியாவில் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

4ஜி மட்டுமின்றி வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Nokia லை ரூ. 2949 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

HMD குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன. இரு மாடல்களில் 4ஜி மட்டுமின்றி வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி சிறப்பம்சங்கள்

– 2.4 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன் 
– பீச்சர் ஒஎஸ்
– 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
– 64 எம்பி ரேம்
– 128 எம்பி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
– விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
– ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
– 1200 எம்ஏஹெச் பேட்டரி

இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்டவை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 225 4ஜி மாடலில் விஜிஏ கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல்

நோக்கியா 215 4ஜி மாடல் சியான் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2949 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :