Samsung கேலக்சி போல்ட் மற்றும் Galxy S20 அறிமுக தகவல் விவரம் வெளியாகியது.

Updated on 07-Jan-2020
HIGHLIGHTS

அந்த வகையில் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2020 விழா பிப்ரவரி 11-ம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் அந்நிறுவனம் அடுத்த தலைமுறை மொபைல் அனுபவங்களை உருவாக்கும் புதுமைமிக்க வித்தியாசமான சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிசில் இருந்து கேலக்ஸி எஸ்20 சீரிசுக்கு மாற இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ், கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 5x டெலிபோட்டோ லென்ஸ், அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 3டி டைம் ஆஃப் பிலைட் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமரா, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

https://twitter.com/SamsungMobile/status/1213671462990540801?ref_src=twsrc%5Etfw

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் வளைந்த டைனமிக் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்டுகிறது. கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ் போன்று கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் புளூம் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் SM-F700F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாகவும், இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ்களையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதில் யு.எஸ்.பி. டைப்-சி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :