Motorola Edge 40 இந்தியாவில் அறிமுகம் இந்த டாப் 10 அம்சங்கள் போனை ஆக்கும் சூப்பர் கூலாக.
மோட்டோரோலா தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 40ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 ஆரம்ப விலையில் வருகிறது
மோட்டோரோலா எட்ஜ் 40 யின் சிறந்த 10 அம்சங்களைப் பார்ப்போம்:
மோட்டோரோலா தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 40ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 ஆரம்ப விலையில் வருகிறது மற்றும் மே 30 முதல் விற்பனைக்கு வரும். இந்த போன் வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் சில அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 40 யின் சிறந்த 10 அம்சங்களைப் பார்ப்போம்:
1. புதிய மோட்டோரோலா ஃபோன் 6.55-இன்ச் pOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது ஒரு பிரிவில் முதல் 144Hz 3D வளைந்த டிஸ்ப்ளே ஆகும். இந்த டிஸ்ப்ளே 1200 nits ப்ரைட்னஸ் மற்றும் HDR10+ சப்போர்ட்டை வழங்குகிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சாரையும் வழங்குகிறது..
2. Edge 40 மீடியாடெக் 8020 ப்ரோசெசர் கொண்டுள்ளது, மேலும் இதில் 8GB LPDDR4X மற்றும் 256GB UFS3.1 ஸ்டோரேஜுடன் வருகிறது.
3. ஃபோன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ரா-வைட் + மேக்ரோ விஷன் சென்சார் மற்றும் OIS ஆதரவுடன் வருகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிலிங்கிற்காக 32எம்பி முன்பக்க கேமரா உள்ளது.
4. இது தவிர, சார்ஜிங் பற்றி பேசினால், சாதனம் 4400mAh பேட்டரியுடன் 68W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜரைப் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இதில் வழங்கப்படுகிறது.
5. டிசைனை பொறுத்தவரை, இந்த ஃபோன் பிரீமியம் வேகன் லெதர் ஃபினிஷுடன் வருகிறது மற்றும் PMMA அக்ரிலிக் கிளாஸ் மாறுபாட்டிலும் கிடைக்கிறது.
6. போன்IP68 என ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, போனை 30 நிமிடம் தண்ணீருக்கு அடியில் வைத்திருக்கலாம்.
7 இந்த போன் Eclipse Black, Nebula Green மற்றும் Lunar Blue மூன்று அசத்தலான நிறத்தில் வருகிறது.
8 இது தவிர, போன் 14 5G பேண்டுகள் மற்றும் WiFi 6 நெட்வொர்க்கிற்கு துணைபுரிகிறது, இதன் மூலம் நீங்கள் பாஸ்ட் சார்ஜிங்கை அனுபவிக்க முடியும்.
9 போனின் பக்கங்களிலும் எட்ஜ் லைட்கள் வைக்கப்பட்டுள்ளது, அவை காலிங் , மெசேஜ் அல்லது ஏதேனும் நோட்டிபிகேஷன் இருக்கும்போது இயக்கப்படும்.
10 கடைசியாக, போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸையும் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile