Motorola இந்தியாவில் அதன் ஸ்டைலிஷான போனை அறிமுகம் செய்துள்ளது

Updated on 14-May-2025
HIGHLIGHTS

Motorola இந்தியாவில் அதன் 60 சீரிஸ் யின் கீழ் இரண்டு புதிய போன் அறிமுகம் செய்தது

Motorola Razr 60 Ultra மற்றும் Motorola Razr 60 அடங்கும்

இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola இந்தியாவில் அதன் 60 சீரிஸ் யின் கீழ் இரண்டு புதிய போன் அறிமுகம் செய்தது அதில் Motorola Razr 60 Ultra மற்றும் Motorola Razr 60 அடங்கும் இப்பொழுது இந்திய சந்தையில் அதன் Motorola Razr 60 Ultraஎன்ட்ரி லெவல் கீழ் அறிமுகம் செய்தது மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola Razr 60 Ultra விலை மற்றும் விற்பனை தகவல்

  • Motorola Razr 60 Ultra 16 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒரே மாடலான மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ராவின் விலை இந்தியாவில் ரூ.89,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த போன் ரியோ ரெட், ஸ்காராப், மவுண்டன் டிரெயில் மற்றும் கேபரே கலர்களில் விற்பனை செய்யப்படும்.
  • இந்த போல்டபில்போன் ஃபிளிப் போன் மே 21 முதல் அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஆஃப்லைன் கடைகள் மற்றும் மோட்டோரோலா வலைத்தளம் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும்.

Motorola Razr 60 Ultra சிறப்பம்சம்.

Motorola Razr 60 Ultra போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.96-இன்ச் யின் LTPO pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 2992 x 1224 பிக்சல் ரேசளுசன் 165Hz ரெப்ராஸ் ரேட் HDR10+, Dolby Vision,120 சதவிகிதம் வழங்குகிறது மற்றும் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது

மேலும் இந்த போனில் 4-இன்ச்யின் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது 1272 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 3,000 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது

மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஃபோன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC ஆல் இயக்கப்படுகிறது, இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 ஐ விட வேகமான சிப் ஆகும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா போனில் பின்புறம் மற்றும் செல்ஃபிக்கு 50MP கேமராவைப் பயன்படுத்தியுள்ளது. அதாவது பயனர்களுக்கு அட்டைத் திரையில் 50MP பிரதான கேமராவும், 50MP அல்ட்ரா-வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரைமரி ஸ்க்ரீனில் 50MP கேமராவும் உள்ளது.

இந்த போனில் 4,700mAh பேட்டரி உள்ளது, இது 68W வயர்டு சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . வயர்டு சார்ஜிங் மூலம் 40 நிமிடங்களில் போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹலோ UI இல் இயங்குகிறது. மோட்டோரோலா 3 வருட OS அப்டேட்களையும் 4 வருட பாதுகாப்பு கனேக்டிவிட்டிகளை வழங்குகிறது.

இணைப்பு மற்றும் பல: தொலைபேசியில் 6GHz க்கும் குறைவான 5G, Wi-Fi 7, புளூடூத் 5.4, USB Type-C மற்றும் NFC போன்ற இணைப்பு விருப்பங்கள் உள்ளன. இந்த சாதனம் டால்பி அட்மோஸை ஆதரிக்கும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது தவிர, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் IP48 டஸ்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :