Motorola One Vision அறிமுக தேதி பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கங்க.

Updated on 04-May-2019

மோட்டோரோலா நிறுவனம் தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2560 பிக்சல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த கேமரா கொண்டு 12 எம்.பி. தரத்தில் போட்டோக்களை எடுக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா நிறுவனம் ஒன் ஆக்‌ஷனையும் அறிமுகம் செய்யலாம். இதே விழாவில் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

இத்துடன் இது குறைந்த வெளிச்சத்திலும் தரமான புகைப்படம் எடுக்க வழி செய்கிறது. இதுமட்டுமின்றி இரண்டாவது பிரைமரி கேமரா சென்சார், 3 ஜி.பி. அல்லது 4 ஜி.பி. ரேம் மற்றும் 32, 64 அல்லது 128 ஜி.பி. மெமரி மற்றும் 3500 Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :