Motorola One Fusion ஸ்மார்ட்போன் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகும்.

Updated on 14-Jun-2020
HIGHLIGHTS

Motorola One Fusion இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம்

ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது

5000 Mah பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. 

Motorola One Fusion  சிறப்பம்சங்கள்:

6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை நீட்டிக்கும் வசதி
கைரேகை சென்சார்
64 எம்பி பிரைமரி கேமரா
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
5 எம்பி மேக்ரோ
2 எம்பி டெப்த் கேமரா
16 எம்பி செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 10
5000 எம்ஏஹெச் பேட்டரி
15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி

முன்னதாக மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :