MOTOROLA ONE ACTION ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 23 அறிமுகமாகும்.

Updated on 10-Aug-2019

மோட்டோரோலா ஒன் சூம் மற்றும் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி மோட்டோரோலா இந்தியாவில் சிறப்பு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமேசான் வலைத்தளத்தில் லீக் ஆனது. மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ டீசரில் ஸ்மார்ட்போனின் மாடல் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. புதுவிதமான சாதனம் ஒன்றை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறோம் என மோட்டோரோலா அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2520×1080 பிக்சல் 21:9 டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9609 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12.6 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் இன்-ஸ்கிரீன் கேமரா, 117-டிகிரி அல்ட்ரா-வைடு சென்சார், டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

இத்துடன் 3500 Mah . பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 23,650) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

இதனுடன்  #CaptureTheAction எனும் ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது. இதனால் மோட்டோரோலா தனது ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :