Motorola இரண்டு புதிய மிட் ரேன்ஜ் 5G ஸ்மார்ட்போன்களான Moto G86 5G மற்றும் Moto G86 Power 5G ஆகியவற்றை உலக சந்தையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் G சீரிஸ் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது . இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த பேட்டரி லைப் , சக்திவாய்ந்த பர்போமான்ஸ் மற்றும் பிரீமியம் டிஸ்ப்ளே அம்சங்களுடன் வருகின்றன. இந்த போனின் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Moto G86 5G போனில் 2712 x 1220 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ சப்போர்ட், 10-பிட் கலர் மற்றும் 4500 nits வரை பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i வழங்கப்பட்டுள்ளது.
Moto G86 5G ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் உள்ளது, இது Android 15 ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இது 8 ஜிபி ரேமைக் கொண்டுள்ளது, இதை வெர்சுவல் மெமரி உதவியுடன் 24 ஜிபி வரை அதிகரிக்க முடியும். ஸ்டோரேஜிற்க்காக , இது 256GB uMCP ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
ன்புறத்தில் 50MP சோனி LYTIA 600 முதன்மை சென்சார் கொண்டுள்ளது, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவைக் கொண்டுள்ளது. இது தவிர, இது 8MP அல்ட்ராவைடு + மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ஆட்டோ நைட் விஷன், ஜெஸ்டர் கேப்சர் மற்றும் ப்ரோ மோட் போன்ற AI அம்சங்களையும் கொண்டுள்ளது முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.இந்த போனில் 5200mAh பேட்டரியுடன் வருகிறது, மற்றும் இது 30W டர்போபவர் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
மோட்டோ G86 பவர் 5G ஆனது 2712 x 1220 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ சப்போர்ட், 10-பிட் கலர் மற்றும் 4500 nits ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i உடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7300 சிப்செட்டிலும் இயங்குகிறது மற்றும் Android 15 ஐ சப்போர்ட் செய்கிறது இதை தவிர இது 512GB வரையிலான ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது, இதை தவிர கேமரா பற்றி பேசுகையில் பின்புறத்தில் 50MP சோனி லைட்டியா 600 ப்ரைமரி சென்சார் உள்ளது, இது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) சப்போர்டை கொண்டுள்ளது. இது தவிர, இது 8MP அல்ட்ராவைடு + மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், முன் கேமரா 32MP ஆகும், இது 4K வீடியோ ரெக்கார்டிங் செய்கிறது. பேட்டரி இதன் மிகப்பெரிய அம்சம், இது ஒரு பெரிய 6720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது,இது 30W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.
மோட்டோ G86 5G 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை £280.00 யூரோக்கள் (தோராயமாக ரூ. 32,169) மற்றும் மோட்டோ G86 பவர் 5G 8GB + 512GB சேமிப்பு வகையின் விலை £299.99 யூரோக்கள் (தோராயமாக ரூ. 34,471) ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்துள்ளன. மோட்டோ ஜி86 5ஜி மற்றும் மோட்டோ ஜி86 பவர் 5ஜி ஆகியவை பான்டோன் காஸ்மிக் ஸ்கை, பான்டோன் கிரிஸான்தமம், பான்டோன் கோல்டன் சைப்ரஸ் மற்றும் பான்டோன் ஸ்பெல்பவுண்ட் ஆகிய கலர்களில் கிடைக்கின்றன.
இதையும் படிங்க Motorola Razr 60 போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க