Moto G57 Power 5G Launched-
Motorola இன்று அதன் புதிய Moto G57 Power 5G போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் மிக சிறந்த 7000mAh பேட்டரி மற்றும் 50MP மெயின் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் vegan லெதர் பினிஷ் உடன் ப்ரீமியம் லுக் தருகிறது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி பார்வை புலம் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் (f/2.2) செல்ஃபி கேமராவைப் பெறுகிறது. இது 60 fps வரை 2K ரெசளுசன் கொண்ட வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டது.
இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் அழிப்பான், போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க:lipkart Black Frday Sale:Google யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்
இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.மோட்டோ ஜி57 பவர் 5ஜி, புளூடூத் 5.1, டூயல் பேண்ட் வைஃபை, யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, QZSS, ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .
Moto G57 Power 5G போனின் உண்மையான விலை ரூ,14,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ, 12,999க்கு வாங்கலாம் , மேலும் இந்த போனின் விற்பனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் டிசம்பர் 3 அறிமுகமாகும் இதை தவிர motorola ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம், மோட்டோ ஜி57 பவர், பான்டோன் ரெகாட்டா, பான்டோன் ஃப்ளூயிடிட்டி மற்றும் பான்டோன் கோர்செய்ர் வண்ணங்களில் வழங்கப்படும்.