Motorola Edge 70 Launch date battery Capacity confirmed before launch
Motorola பிரியர்களுக்கு Motorola Edge 70 அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது Motorola Edge 60 போலக்வே இந்த போனிலும் Snapdragon 7 Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படும் என கூறப்படுகிறது மேலும் இந்த போன் நவம்பர் மாதம் அறிமுகமாகும் மேலும் இதன் அறிமுக தேதி மற்றும் இதில் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Motorola Edge 70 தற்பொழுது நவம்பர் 5 ஆம் தேதி போனின் உலகளாவிய அறிமுகத்திற்கான களத்தை அமைக்கிறது . அடுத்த மாதம் வெளியீடு குறித்த முந்தைய வதந்திகளை உறுதிப்படுத்தும் வகையில், நிறுவனமே அதன் வெப்சைட்டில் ஒரு பகுதியின் மூலம் உறுதிப்படுத்தலை வழங்கியது, இந்த அறிவிப்பு போனின் அல்ட்ரா தின் மாடலில் இருக்கும் என்பதால் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்
இதையும் படிங்க Samsung பட்ஜெட் விலையில் வரும் பக்கவான போன் அறிமுகம் தீபாவளி புது துணி போல போனையும் வாங்கலாம்
Motorola Edge 70 இன் டிசைன் மற்றும் அம்சங்கள் தெரியவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 1,220 × 2,712 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.67-இன்ச் POLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Snapdragon 7 Gen 4 ஐ ப்ரோசெசர் பயன்படுத்தும். இந்த ஸ்மார்ட்போனின் இரட்டை பின்புற கேமரா அலகு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் இரண்டு 50-மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டிருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு முன்புறத்தில் 50-மெகாபிக்சல் கேமரா இருக்கும்.
இது மோட்டோரோலாவின் மிக மெல்லிய கைபேசியாக இருக்கலாம். இதன் தடிமன் 6 மிமீ இருக்கலாம். டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கலாம்.
இந்த இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இல் இயங்கும். கனேக்சனுக்கு , இது 5G, புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், NFC மற்றும் USB டைப்-சி போர்ட் விருப்பங்களைக் கொண்டிருக்கும். மோட்டோரோலா எட்ஜ் 70 இன் 4,800 mAh லித்தியம்-அயன் பேட்டரி 68 W வயர்டு சார்ஜிங் மற்றும் 15 W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்
சமீபத்திய கசிவு, மோட்டோரோலா எட்ஜ் 70 இன் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை EUR 709 (தோராயமாக ரூ. 73,100) மற்றும் EUR 801.91 (தோராயமாக ரூ. 82,700) க்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கிறது, இது முந்தைய கசிவில் EUR 690 (தோராயமாக ரூ. 70,000) விலையை விட சற்று அதிகமாகும். இது Pantone Bronze Green, Pantone Gadget Grey மற்றும் Pantone Lily Pad நிழல்களில் கிடைக்கும் என்று வதந்தி பரவியுள்ளது.