108MP கேமரா கொண்ட Motorola Edge 20 Pro​ ஸ்மார்ட்போன் அறிமுகம்.

HIGHLIGHTS

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று (அக்1) இந்தியாவில் அறிமுகமானது

பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

108MP  கேமரா கொண்ட Motorola Edge 20 Pro​  ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று (அக்1) இந்தியாவில் அறிமுகமானது. இந்த பிராண்ட் மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 ஃப்யூஷனை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த் அறிமுகம் நிகழ்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்றில் இன்று அறிமுகமானது தான் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட் ஆகும.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

 மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ விலை தகவல்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile