64MP கேமரா மற்றும் 6000MAH பேட்டரி கொண்ட MOTO G9 POWER இந்தியாவில் அறிமுகம்.

Updated on 09-Dec-2020
HIGHLIGHTS

புதிய MOTO G9 POWER ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

MOTO G9 POWER ஸ்மார்ட்போனில் ஒரு -பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு கிடைக்கிறது

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு -பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு கிடைக்கிறது, இது தவிர, போனில் மூன்று கேமரா அமைப்பைப் வழங்குகிறது . உங்களுக்கு  இந்த போனில் இரண்டு வெவ்வேறு ஷேட் கிடைக்கிறது , இது தவிர, போனில் ஐபி 52 நீர் விரட்டும் வசதியையும் வழங்குகிறது..

MOTO G9 POWER சிறப்பம்சம்.

புது ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஆண்ட்ராய்டு 10 மற்றும் மை யுஎக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல்.

இந்தியாவில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலெக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :