Motorola பிரியர்களே புது போன் வாங்க போறிங்களா அப்போ தேதி குருசாச்சு அடுத்த வாரம் வருகிறது புதிய போன்

Updated on 29-Oct-2025
HIGHLIGHTS

புதிய Moto G67 5G போனை அடுத்த மாதம் அதாவது அடுத்த வாரம் புதன்கிழமை நவம்பர் மாதம் அறிமுக செய்ய இருக்கிறது

7,000mAh பேட்டரியுடன் மிலிட்டரி கிரேட் அம்சத்துடன் வருகிறது

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டின் மைக்ரோ சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது

Motorola இந்திய சந்தையில் அதன் புதிய Moto G67 5G போனை அடுத்த மாதம் அதாவது அடுத்த வாரம் புதன்கிழமை நவம்பர் மாதம் அறிமுக செய்ய இருக்கிறது அதாவது இந்த போனில் பல சுவாரஸ்மான அம்சம் 6.7-இன்ச் 120Hz டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின் கேமரா, 7,000mAh பேட்டரியுடன் மிலிட்டரி கிரேட் அம்சத்துடன் அது அதிக நாள் நீடித்துளைக்கும் மேலும் இதன் அறிமுக தகவல் மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Moto G67 Power 5G விலை தகவல்

மோட்டோரோலாவின் Moto G67 Power 5G போன் இந்தியாவில் நவம்பர் 5 தேதி 12pm அறிமுகம் செய்யப்படும் என இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டின் மைக்ரோ சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது , இதன் மூலம் இது ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.மேலும் இது மூன்று கலர் நீளம், பச்சை மற்றும் உதா கலரில் அறிமுகம் செய்யப்படும் மேலும் சரியான கலர் தகவல் தெரியவில்லை இதன் டீசர் போட்டோவின் மூலம் தெரியப்படும் கலர் ஆகும்.

Moto G67 Power 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Moto G67 Power 5G அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படும். போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் சோனி சென்சார் கொண்ட 50MP ப்ரைம் கேமரா இருக்கும். இந்த போனில் மிலிட்டரி கிரேட் நீடித்துழைப்புடன் வரும். சக்தியைப் பொறுத்தவரை, இந்த போனில் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். போனில் MIL-810H இராணுவ தர பாதுகாப்பு மற்றும் IP64 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இந்த போன் வீகன் லெதர் டிசைனுடன் வழங்கப்படும்.

Moto G67 Power 5G போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசருடன் 8GB யின் ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, மேலும் இந்த போனை 24GB ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் Android 15-அடிபடையின் கீழ் Hello UX, வழங்கப்படும் அதன் பிறகு Android 16 அப்க்ரேட் கிடைக்கும் மேலும் இந்த போனில் மிகவும் சுவாரஸ்மான Dolby Atmos சப்போர்ட் மற்றும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படும்

Moto G67 Power 5G போனில் பிங்கர் ஸ்க்ரீன்ஷாட் சப்போர்ட், Family Space 3.0 , கேமரா பிளாஷ்லைட் போன்ற அம்சங்களுடன் வரும் மேலும் இதில் நிறுவனம் Smart Connect மற்றும் chop gestures போன்ற அம்சங்கள் வழங்கப்படும், மேலும் இந்த போனில் AI Photo Enhancement Engine இருக்கும் இதன் மூலம் உங்கள் போட்டோ அழகாக மாற்றும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :