144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களை சப்போர்ட்செய்யும் MediaTek டிமென்சிட்டி சிப்செட் அறிமுகம்.

Updated on 08-May-2020
HIGHLIGHTS

புதிய டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்டில் டூயல் 5ஜி சிம் வசதி, மீடியாடெக் நிறுவனத்தின் 5ஜி அல்ட்ராசேவ் பவர் சேவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது

மீடியாடெக் நிறுவனம் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்டை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த டிமென்சிட்டி 1000 சிப்செட்டின் மேம்பட்ட ஃபிளாக்ஷிப் வெர்ஷன் ஆகும். 

மேலும் இதில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இது வழக்கமான 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களை விட 2.4 மடங்கு வேகமாக இயங்கும் என மீடியாடெக் தெரிவித்துள்ளது. டிமென்சிட்டி 1000 போன்றே புதிய 1000 பிளஸ் சிப்செட்டிலும் ஹைப்பர்என்ஜின் 2.0 வசதி கொண்டிருக்கிறது. இது சீரான கேமிங் அனுபவம் வழங்கும்.

புதிய டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட்டில் டூயல் 5ஜி சிம் வசதி, மீடியாடெக் நிறுவனத்தின் 5ஜி அல்ட்ராசேவ் பவர் சேவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது நெட்வொர்க் சூழ்நிலை மற்றும் பயனர் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பேட்டரி பயன்பாட்டை தானாக மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகும்.

மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் சிப்செட் விரைவில் சந்தையில் கிடைக்கும். மேலும் இந்த சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஐகூ பிராண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :