எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
LG நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கல் மற்றும் வீடியோ சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் இருந்து வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி7 நியோ என்ற பெயரில் வெளியானது.
தற்சமயம் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி7 தின்க் என்ற பெயரில் LM-G710M குறியீட்டு பெயருடன் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் முதற்கட்ட சோதனைகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய புகைப்படங்களும், ஏற்கனவே வெளியான படங்களுடன் ஒற்றுபோகிறது.
முன்னதாக எவான் பிளாஸ் வெளியிட்டிருந்த ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களும் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. வெளியீட்டிற்கு முந்தைய மென்பொருள் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் 252,473 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.