லெனோவா இசட் 6 பற்றி நீண்ட காலமாக பல தகவல்கள் வந்த வகையில் இருந்தது, இந்த போன் இன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் லெனோவாவின் சமீபத்திய லெனோவா இசட் 6 ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கு மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 730 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஏற்கனவே சீன சந்தையில் லெனோவா இசட் 6 ப்ரோ மற்றும் Lenovo Z6 Youth Edition அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இந்த போன்களுக்கு பிறகு, லெனோவா இசட் 6 சீரிஸ் சமீபத்திய சாதனமாகும். நிறுவனம் இந்த புதிய போனை நீல நிறத்தில் பயனர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளது.
LENOVO Z6 விலை
விலை பற்றி பேசினால்,லெனோவா ப்ராண்டை அதன் இந்த லேட்டஸ்ட்ட் ஸ்மார்ட்போனை வெல்வேறு வகையில் அறிமுகப்படுத்தியது.போனின் ஆரம்ப விலை 1,899 சீன யுவான் அதாவது ரூ .19,000 ஆகும், இதில் உங்களுக்கு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளை 2,099 சீன யுவானுக்கு வாங்கி கொள்ளலாம், அதாவது சுமார் 21,000 ரூபாய். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டையும் கொண்டுள்ளது, இதன் விலை 2,499 சீன யுவான் அதாவது 25,000 ரூபாய்.ஆகும்.
LENOVO Z6 சிறப்பம்சம்
Lenovo Z6 யில் உங்களுக்கு 6.39 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது, மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு பை அடிப்படையின் கீழ் வேலை செய்கிறது.இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் ,730 ஸ்னாப்ட்ரகன் ப்ரோசெசர் கொண்டுள்ளது.மற்றும் இதில் 8ஜிபி வரை ரேம் இருக்கிறது. இதன் ஆப்டிகல் பற்றி பேசினால்,1.8 அப்ரட்ஜர் உடன் 24 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா கொண்டுள்ளது மற்றும் செகண்டரி கேமரா 8 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதனுடன் இதில் 5 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் உடன் உள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 16 மெகாபிக்ஸல் கேமரா அடங்கியுள்ளது.
பேட்டரிக்கு 4,000 mAh வழங்கப்படுகிறது, இது 15 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இணைப்பு அம்சங்களில் யூ.எஸ்.பி டைப் சி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5 மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்