லாவா நிறுவனம் இந்தியாவில் Lava Z62 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Lava Z62 கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். முன்னதாக லாவா நிறுவனம் இசட்92 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
போட்டோக்கள் எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக், OTG போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன. புதிய லாவா Z62 ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு மற்றும் ஸ்பேஸ் புளு நிறங்களில் கிடைக்கிறது.
விலை மற்றும் விற்பனை. இந்தியாவில் Lava Z62 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6060 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 18 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்குகிறது.
புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ததோடு, வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து புதிய இசட்62 ஸ்மார்ட்போனினை இலவசமாக வெல்ல போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.