பக்கவான டுயல் ஸ்க்ரீன் உடன் LAVA யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சம் பாருங்க

Updated on 19-Jan-2026
HIGHLIGHTS

Lava அதன் புதிய LAVA Blaze Duo 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது

இந்த போனில் டுயல் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது

இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Lava அதன் புதிய LAVA Blaze Duo 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இந்த போனில் டுயல் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது அதாவது இந்த போனில் கேமரா பக்கத்தில் சிறிய டிஸ்ப்ளே மற்றும் Full ஸ்க்ரீன் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 5000mAh பேட்டரி போன்ற பல சுவாரஸ்ய அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Lava Blaze Duo 3 விலை தகவல்

இந்த போன் சிங்கிள் ஸ்டோரேஜ் வகையான 6GB RAM + 128GB ஸ்டோரேஜில் கொண்டு வரப்பட்டுள்ளது இதன் விலை ரூ,16,999 ஆகும் மேலும் இந்த போன் ஜனவரி 19 இன்று முதல் நீங்கள் அமேசானில் வாங்கலாம்.

Lava Blaze Duo 3 சிறப்பம்சம்.

Lava Blaze Duo 3 இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் டுயல் ஸ்க்ரீன் செட்டப் வழங்கப்படுகிறது இதில் முன் பக்கத்தில் 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ்ரேட் அதே அதன் பின்புறத்தில் 1.6-இன்ச் AMOLED செகண்டரி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதன் மூலம் நீங்கள் போனை திருப்பாமலே நோட்டிபிகேஷன், நேரம் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் போன்றவற்றை செய்ய முடியும்.

இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Dimensity 7060 ப்ரோசெசர் மற்றும் இதனுடன் 6GB LPDDR5 RAM வழங்கப்படுகிறது இதனுடன் இதன் வெர்ஜுவல் ரேமை 6GB வரை அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போன் 128GB வரை UFS 3.1.வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் Android OS அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் போன்றவற்றை உருதி கொடுத்துள்ளது மேலும் இந்த போன் Android 15 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க வந்தாச்சு Flipkart Republic Day சூப்பர் ஆபர் Motorola போன்களுக்கு பக்கவான ஆபர்

இப்பொழுது கேமரா அம்சங்களை பொறுத்தவரை 50MP யின் Sony IMX752 சென்சார் கொண்ட மெயின் கேமரா மற்றும் இதன் முன் பக்கத்தில் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது

இப்பொழுது கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசுகையில் 5000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், பேஸ் அனலாக் மற்றும் USB Type-C போர்ட் போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை Moonlight Black, Imperial Gold கலரில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :