Lava A1 கலர்ஸ் மொபைல் போன் 999ரூபாயில் அறிமுகம் செய்துள்ளது.

Updated on 06-Mar-2020
HIGHLIGHTS

புதிய மொபைல் லாவா ஏ1 கலர்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மொபைல் போன் பிராண்டான லாவா ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் லாவா ஏ1 கலர்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மொபைலை ஆங்கிலம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி என ஏழு மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. லாவா ஏ1 கலர்ஸ் லைட் புளூ, கிரீன் மற்றும் மெஜன்டா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த பேட்டரி மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என லாவா தெரிவித்துள்ளது. இந்த மொபைலில் உள்ள டார்ச்சினை நேவிகேஷன் பட்டனை க்ளிக் செய்து ஆன் செய்யலாம். இத்துடன் காண்டாக்ட்களில் புகைப்படம் செட் செய்து கொள்ளும் வசதி, கால்குலேட்டர், ஸ்டாப்வாட்ச், காலெண்டர், அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாலிகார்பனைட் பாடி, இன்ஸ்டண்ட் டார்ச், ஆட்டோ கால் ரெக்கார்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.8 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, 128×160 பிக்சல் ரெசல்யூஷன், 0.3 எம்.பி. கேமரா, 800 Mah . பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் லாவா ஏ1 கலர்ஸ் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலை வாங்குவோருக்கு நாடு முழுக்க ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :