ஆன்லைன் கிளாஸ்க்கு ஏற்ற 10,000ரூபாயில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

Updated on 12-Sep-2020
HIGHLIGHTS

கொரோனா வைரஸ்  பாதிப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகள்  கடந்த  சில  மாதங்களாக  மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக மாணவ மாணவிகள்  பள்ளி  செல்ல  முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது,  மேலும் தற்பொழுது  அரசு மற்றும்  தனியார்  பள்ளி  மாணவ மாணவிகள்  ஆன்லைன்  வகுப்பு மூலம் பாடங்களை கற்பித்து வருகிறார்கள், அந்த  வகையில்  பள்ளி  மாணவ மாணவிகளுக்கு உதவும்  10,000ரூபாய்க்குள்  இருக்கும்  லேட்டஸ்ட்  ஸ்மார்ட்போன்கள் பற்றி  பார்ப்போம் வாங்க.

TECNO SPARK  6 AIR

Tecno வின்  TECNO Spark  6 Air  இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 6000 Mah வலுவான பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இது சிங்கிள் ரிச்சார்ஜில் நீண்ட நேரம் பற்றி வழங்குவதாகக் கூறுகிறது. ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா கிடைக்கிறது. புதிய டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போனில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது  அமேசான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்

OPPO 11K

ஒப்போ ஏ 11 கே அமைதியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ .8,990 ஆக வைக்கப்பட்டுள்ளது. . இந்த போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனில் 6.2 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது: 19: 9 என்ற ரேஷியோ உடன். போனில் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1 இல் இயங்குகிறது. இந்த போனில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி  கேமராவும் உள்ளது. முன் கேமரா 5 மெகாபிக்சல்கள் கொண்டது. போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி உள்ளது

REALME C11

Realme C11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய Realme C 11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது, இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

TECNO SPARK 5 PRO

டெக்னோ பிராண்டின் புதிய ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய நச்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், டெக்ஸ்ச்சர் டிசைன், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5000 Mah  பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐஸ் ஜடைட், ஸ்பார்க் ஆரஞ்சு மற்றும் சீபெட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

INFINIX SMART 4 PLUS

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் ஜெம்-கட் டெக்ஸ்ச்சர் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் வேவ் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LAVA Z61 PRO

புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய LAVA Z61 PROஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. LAVA Z61 PRO 5.45 இன்ச் HD + டிஸ்ப்ளேவை 18: 9 என்ற ரேஷியோவுடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனை இயக்குவது பெயரிடப்படாத 1.6GHz ஆக்டா கோர் SoC ஆகும், இது 2 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 16 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது, அதை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும். கேமரா பொறுத்தவரை, லாவா இசட் 61 ப்ரோ ஒரு 8 எம்பி பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 5 எம்பி பியூட்டி மோட் உள்ளது. மற்ற கேமரா அம்சங்களில் போர்ட்ரெய்ட் பயன்முறை, பர்ஸ்ட் மோட் , பனோரமா, உள்ளமைக்கப்பட்ட வடிப்பான்கள், பிபியுட்டி முறை, HDR மற்றும்  நைட் மோட் ஆகியவை அடங்கும், புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 5774 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

REDMI 8

ரெட்மி 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Redmi 8 யில் 6.22 இன்ச் கொண்ட பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் அதன் ரெஸலுசன்  720 x 1520 பிக்சல் HD ரெஸலுசனுடன் வருகிறது மற்றும் இந்த டிஸ்பிளேவின் மேல் பகுதியில் டாட் நோட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பு பற்றி பேசினால்,, ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் உடன் ரெட்மி 8 இன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பில் 12 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது, இது 1.4 மைக்ரோ பிக்சல்கள் சைஸ் கொண்டுள்ளது.மற்றும் எஃப் / 1.8 என்ற அப்ரட்ஜர் கொண்டது மற்றும் சோனியின் IMX363 இமேஜ் சென்சார் ஆகும். இரண்டாவது கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும். ரெட்மி 8 இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .7,999 ஆகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .8,999 ஆகவும் வழங்கப்படுகிறது

REDMI 8A DUAL

ரெட்மி 8 ஏ புரோ 6.22 இன்ச் LCD பேனலைக் கொண்டுள்ளது, இது கொரில்லா கிளாஸ் 5 இன் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 439 ஆல் இயக்கப்படுகிறது. இது தவிர, தொலைபேசியில் 16 ஜிபி அல்லது 32 ஜிபி சேமிப்பு வழங்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதன் சேமிப்பை அதிகரிக்க முடியும்.இந்த போனில் 5,000mAh  பேட்டரி உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது. பெட்டியில் 10W சார்ஜர் வழங்கப்படுகிறது. போனின் பரிமாணம் ரெட்மி 8 ஏ டூயல் ஆகும். இதன் அளவீட்டு 156.5 x 75.4 x 9.4 mm மற்றும் பாடி P2i ஸ்பிளாஸ் ப்ரூஃப் வழங்கப்படுகிறது. போனில் 3.5 மிமீ ஹெட்போன் பலா உள்ளது. ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499  வைக்கப்பட்டுள்ளது

REALME NARZO 10A

ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது.நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது. ரியால்மி நர்ஜோ 10 ஏ இரண்டு வகைகளில் வருகிறது. இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிக்கப்பட்ட வேரியண்ட் விலை ரூ .8,999 மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை ரூ .9,999. நீலம் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :