10GB ரேம் உடன் வரும் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்.

Updated on 03-Oct-2019

தோற்றம், வடிவமைப்பு, விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுக்காக அறியப்பட்ட இதுபோன்ற பல ஸ்மார்ட்போன்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம், இது தவிர, அவை அவற்றின் கேமரா மற்றும் குறிப்பாக ரேமுக்கு மிகவும் பிரபலமாகிவிட்டன, இன்று நாங்கள் உங்களுக்கு 8 ஜிபி மற்றும் 10 ஜிபி யில் வரக்கூடிய ரேம் உடன் வரும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றி நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம். எனவே அதிக நேரம் தாமதிக்க வேண்டாம், மேலும் நாம்  இன்று 10GB மற்றும் 8GB  ரேம் உடன் வரும் ஸ்மார்ட்போன்கள்; பற்றி பார்ப்போம் வாருங்கள் 

VIVO NEX DUAL DISPLAY EDITION

சிறப்பம்சங்களை பற்றி பேசினால் ,Vivo NEX Dual Display  பதிப்பில் 6.39 இன்ச் சூப்பர் AMOLED பேஜில்லெஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5: 9 என்ற விகிதத்துடன் மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டுள்ளது.கொண்டது. டிஸ்பிளேவின் ஸ்க்ரீன் ரேஷியோ 91.63% என்று விவோ கூறுகிறது. பின்புற டிஸ்பிளே தரத்தின் அடிப்படையில் ஒரு சமமான சூப்பர் AMOLED டிஸ்பிளே. பின்புற காட்சி 5.49 அங்குல அளவு மற்றும் 1920×1080 பிக்சல்களின் FHD ரெஸலுசன் வழங்குகிறது மற்றும் 16: 9 என்ற ரேஷியோவை கொண்டுள்ளது.  Vivo NEX Dual ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ONEPLUS 7 PRO

இதன் கேமரா பற்றி பேசினால் கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் LED ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 அப்ரட்ஜர் உடன்  1/2.25" சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதுசெல்பி கேமரா பற்றி பேசினால் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளத

XIAOMI BLACK SHARK 2 

புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR . வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும். 

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளத

Nubia Red Magic Mars RNG Edition
புதிய நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக ஹார்டுவேர் ஸ்விட்ச்சை ஆன் செய்யும் போது ரெட் மேஜிக் கேம் ஸ்பேஸ் 2.0 எனும் பிரத்யேக டேஷ்போர்டு திறக்கும். இது கேமிங் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து, கேம்களை மிக வேகமாக லான்ச் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமிங் சார்ந்து இருக்கும் பல்வேறு வசதிகளை மிக எளிமையாக இயக்கலாம்.

OnePlus 6T McLaren Edition

புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.

இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெக்லாரெனின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் வரலாற்றை பரைசாற்றும் வகையில் பிரத்யேக ஸொப்ட்வர் அனிமேஷன்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :