Itel இந்தியாவில் அறிமுகப்படுத்தியது Wi-Fi Tethering உடன் மேஜிக் 2, 4G போன்

Updated on 16-Jun-2021
HIGHLIGHTS

ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் ஆகும்

இதில் வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் டெதரிங், டூயல் 4ஜி வோல்ட் இ, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது

ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது

மொபைல் சாதனங்கள் பிரிவில் மிகவும் நம்பகமான நுகர்வோர் பிராண்டான ஐடெல், சப் 7 கே பிரிவில், தனது முதல் 4 ஜி Feature தொலைபேசியான மேஜிக் 2 4 ஜி (it9210 மாடல்) ஐ அதன் 'மேஜிக் சீரிஸ்' இன் கீழ் அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தது. மேம்படுத்தலுக்காக காத்திருக்கும் பீச்சர் போன் பயனர்களின் பரந்த சந்தையை மனதில் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது. 4 ஜி கனெக்டிவிட்டி , பிரீமியம் பளபளப்பான வடிவமைப்பு, நீடித்த பேட்டரி மற்றும் கிங் வாய்ஸ் போன்ற அம்சங்களைக் கொண்ட இந்த புதுமையான சாதனம் வைஃபை மற்றும் ஹாட்ஸ்பாட் Wi-Fi Tethering  ஆகியவற்றுடன் 8 சாதனங்களை இணைக்க முடியும்.

ஐடெல் மேஜிக் 2 4ஜி அம்சங்கள்

– 2.4 இன்ச் QVGA 3D வளைந்த டிஸ்ப்ளே
– வைபை மற்றும் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 2.0
– 8 பிரீலோட் செய்யப்பட்ட கேம்கள் 
– 9 மொழிகளில் பயன்படுத்தும் வசதி
– கிங் வாய்ஸ், ஆட்டோ கால் ரெக்கார்டர், ஒன் டச் மியூட்
– 1900 எம்ஏஹெச் பேட்டரி

இது ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் ஆகும். இதில் வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் டெதரிங், டூயல் 4ஜி வோல்ட் இ, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

1.3 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், வயர்லெஸ் எப்எம் மற்றும் ரெக்கார்டிங் வசதி, எல்இடி டார்ச், ஒன் டச் மியூட், 1900 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 24 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2349 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :