7050mAh பேட்டரி கொண்ட புதிய போனை அறிமுகம் செய்த iQOO விலை அம்சங்கள் பார்த்து தெருஞ்சிகொங்க
iQOO இந்தியாவில் இன்று அதன் iQOO Z11 போனை அறிமுகம் செய்தது.
இதன் 6GB RAM + 128GB வேரியண்ட்டின் விலை ₹34,999 ஆகும்.
இந்த போனை Celestial Blue மற்றும் Aurora Green கலரில் வாங்கலாம்
iQOO இந்தியாவில் இன்று அதன் iQOO Z11 போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் இந்த போனில் 7050mAh வரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7500 Turbo ப்ரோசெசர் போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiQOO Z11 விலை தகவல்
இந்த iQOO போன் இந்தியாவில் நான்கு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் 6GB RAM + 128GB வேரியண்ட்டின் விலை ₹34,999 ஆகும். இதன் மற்ற மூன்று வேரியண்ட்களான 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB, மற்றும் 12GB RAM + 256GB ஆகியவற்றின் விலைகள் முறையே ₹39,999, ₹44,999, மற்றும் ₹49,999 ஆகும். அடிப்படை வேரியண்ட்டிற்கு ₹3,500 மற்றும் மற்ற வேரியண்ட்டுகளுக்கு ₹4,000 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படும். இதை ஆகஸ்ட் 25 முதல் அமேசான் இ-காமர்ஸ் வெப்சைட்டில் வாங்கலாம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி – ரூ 34,999
8ஜிபி ரேம் + 128ஜிபி – ரூ 39,999
8ஜிபி ரேம் + 256ஜிபி – ரூ 44,999
12ஜிபி ரேம் + 256ஜிபி – ரூ 49,999
iQOO Z11 சிறப்பம்சம்
iQOO Z11 போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.83 இன்ச் யின் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட் மற்றும் 3000 நித்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் 2800 x 1260 பிக்சல் ரெஷளுசன் வழங்கப்படுகிறது,
இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7500 Turbo போன்ற பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் OriginOS 6 யில் இயங்குகிறது
இதையும் படிங்க:புது போன் வாங்க போறிங்களா, அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Realme கொண்டு வருகிறது மாஸ் ஸ்மார்ட்போன்
இந்தப் போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதன் பின்புறப் பகுதியின் வடிவமைப்பு ‘கூகுள் பிக்சல்’ (Google Pixel) போனின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக, இதில் 32MP கேமரா உள்ளது.
இந்த போனில் பேட்டரிக்கு 7050mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்ஷன் வசதிகளைப் பொறுத்தவரை, இந்தத் போனில் 5G, Wi-Fi, Bluetooth மற்றும் USB Type-C போன்ற அம்சங்களை வழங்குகிறது. மேலும், இது மிலிட்டரி கிரேட் தரத்திலான உறுதியையும் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
