iQOO Z10 Lite 5G launched with 6000mAh battery under 10k segment
iQOO இந்தியாவில் சந்தையில் அதன் புதிய 5G போனை அறிமுகம் செய்தது, இதன் பெயர் iQOO Z10 Lite 5G ஆகும். இந்த போனில் 6.74-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO Z10 Lite 5G இன் 4GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.9,999, 6GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.10,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.12,999. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 25 மதியம் 12 மணி முதல் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் iQOO இந்தியா இ-ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கும் . இந்த ஸ்மார்ட்போன் டைட்டானியம் ப்ளூ மற்றும் சைபர் கிரீன் கலர்களில் கிடைக்கிறது. வெளியீட்டு சலுகையைப் பொறுத்தவரை, SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.
iQOO Z10 Lite 5G 6.74-இன்ச் HD + LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1600×720 பிக்சல்கள் ரெசளுசன், 20:9 பாடி ரேசியோ ரேட், 90Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 nits வரை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த தொலைபேசியில் Arm Mali-G57 MC2 GPU உடன் ஆக்டா கோர் MediaTek Dimensity 6300 6nm ப்ரோசெசர் உள்ளது. இந்த போனில் 4GB / 6GB / 8GB LPDDR4x RAM மற்றும் 128GB / 256GB ஸ்டோரேஜ் உள்ளது, இதை microSD உடன் 1TB வரை அதிகரிக்கலாம். இந்த போனில் Android 15 அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க: Vivo யின் போனில் சூப்பர் ஆபர் இன்று முதல் விற்பனை அதிரடி ரூ,3000 டிஸ்கவுண்ட் கூடவே 5000 எக்ஸ்சேஞ் ஆபர்
கேமரா செட்டிங் பொறுத்தவரை, Z10 Lite 5G பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் ஆழ கேமராவையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 167.3 mm, அகலம் 76.95 mm, திக்னஸ் 8.19 mm மற்றும் எடை 202 கிராம். டஸ்ட் மற்றும் ரெசிஸ்டன்ட் பாதுகாக்க இந்த போன் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்சன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.4, GPS, USB டைப்-C போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். இந்த போனில் 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரி உள்ளது.