iQOO இந்த புதிய போனின் அறிமுகம் தகவல் வெளியானது அதன் அம்சம் பாருங்க

Updated on 04-Feb-2025

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான iQOO யின் அதன் iQOO Neo 10R இந்தியாவில் அறிமுக தேதியை உருதி செய்துள்ளது, அதாவது இந்த போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக இ-காமர்ஸ் தளமான amazon microsite மற்றும் அதிகாரபூர்வ twitter X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது இப்பொழுது இந்த போனில் எதிபர்க்ககூடிய அம்சம் மற்றும் அறிமுக தகவலை பற்றி திரிந்து கொள்ளலாம்.

iQOO Neo 10R அறிமுக தேதி

iQOO Neo 10R இந்தியாவில் மார்ச் 11 தேதி அறிமுகமாகும் என உருதி செய்யப்பட்டுள்ளது, இந்த போனின் படத்தை பார்க்கும்போது , போன் ரேஜிங் ப்ளூ நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, இது குறிப்பாக இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.இந்த போனின் டிசைன் ஈர்க்கப்பட்டுள்ளது, படத்தில் அதன் நீலம் மற்றும் வெள்ளை இரட்டை-டோன் தோற்றத்தைக் காணலாம். இந்த ஸ்மார்ட்போனில் சதுர வட்ட கேமரா மாட்யுல் உள்ளது, பின்புற பேனலின் பெரும்பகுதி நீல நிறத்திலும், பக்கவாட்டுகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. மைக்ரோசைட்டின் படி, நிறுவனம் iQOO Neo 10R ஐ இந்த பிரிவில் வேகமான ஸ்மார்ட்போன் என்று விவரித்துள்ளது. 30,000 ரூபாய்க்கும் குறைவான விலை பிரிவில் இந்த போன் மிக பாஸ்டன பவர்புல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

iQOO Neo 10R எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.78 இன்ச் யின் 1.5K AMOLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரேட், 4500 பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இதை தவிர நிறுவனம் ஏற்கனவே snapdragon 8s Gen 3 SoC ப்ரோசெசர் இருக்கும் என உருதி செய்துள்ளது, சேமிப்பு மற்றும் ரேம்: iQOO Neo 10R வேகத்திற்கு 8GB மற்றும் 12GB RAM ஐ வழங்க முடியும். அதேசமயம் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும்.இந்த போன் OS 15 உடன் Android 15 அடிபடையின் கீழ் இயங்கும்.

கேமராவை பற்றி பேசுகையில் iQOO Neo 10R இரட்டை பின்புற கேமரா மற்றும் ப்ரைம் கேமராவிற்கு OIS சப்போர்ட் கொண்டிருக்கும். இதில் 50MP சோனி LYT-600 சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் லீக் அம்சங்கள் பற்றி பார்க்கும்போது இதில் 6400mAh பேட்டரி உடன் இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: Nothing Phone (3a) போன் இந்த தேதியில் அறிமுகமாகும் மற்றும் பல தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :