iQOO Neo 10
iQOO இன்று இந்தியாவில் அதன் iQOO Neo 10 போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் Qualcomm Snapdragon 8s Gen 4 ப்ரோசெசர் கொண்டிருப்பதால் கேமர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் இதனுடன் இந்த போனில் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளது மேலும் இதன் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO Neo 10 இந்தியாவில் 2 கலர் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது அவற்றில் Inferno Red மற்றும் Titanium Chrome கலரில் வருகிறது மேலும் இதன் விலை பற்றி பேசுகையில்
8GB RAM + 128GB Storage – ₹31,999
8GB RAM + 256GB Storage – ₹33,999
12GB RAM + 256GB Storage – ₹35,999
16GB RAM + 512GB Storage – ₹40,999
iQOO Neo 10 இந்தியாவில் நான்கு வேரியண்டில் கொண்டு வந்துள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ,31,999 லிருந்து அதிகபட்ச விலையாக ரூ,40,999 இருக்கிறது இதனுடன் நிறுவனம் அனைத்து மெமரி வகைகளுக்கும் ரூ.2,000 தள்ளுபடி வழங்கும் . இந்த மொபைலின் விற்பனை ஜூன் 3 முதல் இந்தியாவில் தொடங்கும் , மேலும் இதை நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் அமேசானில் இருந்து வாங்கலாம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் , iQOO Neo 10 ஐ புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு நிறுவனம் iQOO Tws 1e இலவசமாக வழங்கும் .
டிஸ்ப்ளே-இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் முதலில் இதன் டிஸ்ப்ளேவில் இருந்து ஆரம்பிப்போம் iQOO Neo 10 யில் 6.78-இன்ச் 1.5K கொண்ட AMOLED டிஸ்ப்ளே வருகிறது இதனுடன் இது 5500nits யின் பீக் பரைத்னாஸ் உடன் இதில் 144Hzரெப்ராஸ் ரேட் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது
ப்ரோசெசர் : இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Qualcomm Snapdragon 8s Gen 4 SoC ப்ரோசெசருடன் ஆண்ட்ரோய்ட் 15 அடிபடையின் கீழ் இது Funtouch OS 15 யில் இயங்குகிறது .
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:- இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இது iQOO Neo 10 5G போன் இந்தியாவில் மூன்று மெமரி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை 8GB+128GB, 12GB+256GB மற்றும் 16GB+512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. இந்த மொபைலில் நீட்டிக்கப்பட்ட ரேம் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, இது அனைத்து வகைகளின் ரேம் சக்தியை இரட்டிப்பாக்குகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மாடல் 16 ஜிபி ரேம் (8+8) ஆற்றலையும், 16 ஜிபி ரேம் 32 ஜிபி ரேம் (16+16) பவர் பெறும். இந்த மொபைல் LPDDR5X Ultra RAM + UFS4.1 ROM ஐ சப்போர்ட் செய்கிறது .
கேமரா :- இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் IQOO 5G போன் இரட்டை பின்புற கேமராவை ஆதரிக்கிறது. இதன் பின்புற பேனலில் F/1.79 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா லென்ஸ் உள்ளது, இது OIS தொழில்நுட்பத்துடன் செயல்படும் Sony IMX882 போர்ட்ரெய்ட் சென்சார் ஆகும். அதே நேரத்தில், பின்புற அமைப்பில் F/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது. இதேபோல், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்கு , iQOO Neo 10 ஆனது F/2.45 அப்ரட்ஜர் இயங்கும் 32-மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது.
பேட்டரி:-இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 7000mAh பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:Lava Bold சீரஸ் இந்த தேதியில் அறிமுகம் மற்றும் விற்பனையும் உருதி செய்துள்ளது