iQOO 5 Pro BMW எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் லீக் வெளியீடு

Updated on 12-Aug-2020
HIGHLIGHTS

IQOO 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய IQOO 5 ப்ரோ BMW எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது

BMW எம் மோட்டார்ஸ்போர்ட் உடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஐகூ பிராண்டு சமீபத்தில் அறிவித்தது. அந்த வரசையில் ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 
 
புதிய ஐகூ 5 ப்ரோ பிஎம்டபிள்யூ எடிஷன் கெவ்லர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. மூன்று சென்சார்களில் ஒன்று பெரிஸ்கோப் கேமரா ஆகும். இந்த கேமரா 5எக்ஸ் ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வழங்கும் திறன் கொண்டது.

ஐகூ நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சக்திவாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்து வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் AMOLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி மொபைல் பிராசஸர், UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR5 ரேம் வழங்கப்பட இருக்கிறது.

இது ஸ்மார்ட்போனினை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது ஆகும்.இத்துடன் ஐகூ 5 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷனில் 55 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், டாப் எண்ட் மாடலில் 120 வாட் அல்ட்ரா ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளத

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :