iQOO 12 போனில் மெகா அதிரடி ஆபர் உடன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 05-Jun-2025
HIGHLIGHTS

கேமிங் போன் வாங்க நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்தால் iQOO 12 போனை வாங்கலாம்,

இந்த போனில் தற்பொழுது அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

iQOO 12 யின் இந்த போனை வெறும் ரூ,45,000 யில் வாங்கலாம்

நீங்க ஒரு நல்ல கேமிங் போன் வாங்க நீண்ட நாட்களாக காத்து கொண்டிருந்தால் iQOO 12 போனை வாங்கலாம், இது இந்த மிட் ரேன்ஜ் செக்மண்டில் வரும் பெஸ்ட் போனாக இருக்கும் மேலும் இந்த போனில் தற்பொழுது அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,அதாவது , iQOO 12 யின் இந்த போனை வெறும் ரூ,45,000 யில் வாங்கலாம் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO 12 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

iQOO 12 தற்போது அமேசானில் ரூ.44,999க்கு விற்கப்படுகிறது, இது அதன் அசல் விலை ரூ.57,999 இலிருந்து குறைவாக உள்ளது. கூடுதலாக, Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாக ரூ.1,349 கேஷ்பேக்கை சேமிக்கலாம். மாதத்திற்கு ரூ.2,182 யில் தொடங்கும் EMI விருப்பங்களையும் நீங்கள் பெறலாம்.

மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாடல் மற்றும் அதன் செயல்பாட்டு நிலையைப் பொறுத்து ரூ.39,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்புக்கு வர்த்தகம் செய்யலாம்.

iQOO 12 சிறப்பம்சம்.

iQOO 12 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 1.5K ரெசளுசன், HDR10+ சப்போர்ட் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மற்றும் மேம்பட்ட கேமிங் பர்போமன்சுக்காக Q1 கேமிங் சிப்செட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 16GB RAM மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

மேலும், இந்த போனில் 50MP ப்ரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இது 16MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :