Apple யின் iPhone 17 Pro Max ஒரு 2025 யின் அட்வான்ஸ் பவர்புல் போனாக இருக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், லீக்கள் மற்றும் அறிக்கைகள் ஏற்கனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்துள்ளன. டிசைன் மாற்றங்கள் முதல் கேமரா அப்டேட் வரை, iPhone 17 Pro Max பற்றி இதுவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் இங்கே பார்க்கலாம்.
ஆப்பிள் வழக்கமாக செப்டம்பர் தொடக்கத்தில் தனது புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும், மேலும் ஐபோன் 17 சீரிஸ் அதே முறையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவுகளின்படி, வெளியீட்டு நிகழ்வு செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறலாம், அதன் பிறகு முன்கூட்டிய ஆர்டர்கள் விரைவில் தொடங்கும். அதிகாரப்பூர்வ விற்பனை தேதி செப்டம்பர் 19 ஆக இருக்கலாம்.
iPhone 17 Pro Max யின் விலை இந்தியாவில் ரூ,1,45,000 இருக்கலாம்
ஆப்பிள் சில முக்கிய டிசைன் மாற்றங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வதந்தி பரவியுள்ளது, மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்று யுனிபைத் வோல்யும் மற்றும் எக்சன் பட்டன். கூடுதலாக, ஆப்பிள் டைட்டானியம் ப்றேமிளிருந்து அலுமினிய மாடலுக்கு மாறக்கூடும், இது எடையைக் குறைக்கவும் நீடித்துழைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் கேமரா செட்டிங் கணிசமாக அப்டேட் செய்ய வாய்ப்புள்ளது. இந்த போன் மூன்று 48MP சென்சார்கள் கொண்ட மூன்று-பின்புற கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்று லீக்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பில் ஃபியூஷன் ப்ரைம் கேமரா, அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் டெட்ராப்ரிசம் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன் கேமராவும் 24MP ஆக மேம்படுத்தப்படலாம்.
iPhone 17 Pro Max வடந்தியின் படி இதில் A19 Pro சிப்செட் அம்சம் கொண்டிருக்கும், மேலும் இது 12GB யின் ரேம் உடன் வரும், அதிக வெப்பமடைவதைத் தடுக்க, போனில் வேப்பர் சேம்ப் குளிரூட்டும் அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க அல்லும் ஆபர் Google இந்த போனில் ஒரே அடியாக ரூ,31,000 அதிரடி டிஸ்கவுண்ட் எந்த போன் தெரியுமா?